உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிப் வினியோகத்தில் சிக்கல் ஸ்மார்ட்போன் விலை உயரும்

சிப் வினியோகத்தில் சிக்கல் ஸ்மார்ட்போன் விலை உயரும்

புதுடில்லி: வினியோக சிக்கல் காரணமாக மெமரி சிப் விலை அதிகரித்து வருவதால், அடுத்தாண்டில் ஆரம்ப, நடுத்தர ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டிரெண்டுபோர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏ.ஐ., சர்வர்களில் பயன்படுத்தப்படும் அதிக மெமரி திறன் கொண்ட சிப் தயாரிப்பில், சிப் தயாரிப்பாளர்கள் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான எல்.பி.டி.டி.ஆர்.4 எக்ஸ் மற்றும் என்.ஏ.என்.டி., பிளாஷ் போன்ற மெமரி சிப்களின் வினியோகம், கணிசமாக குறைந்து வருகி றது. வினியோகம் தடைபடுவதை தவிர்க்க, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே சிப்களை வாங்க துவங்கி உள்ளன. நான்காவது காலாண்டில், எல்.பி.டி.டி.ஆர்.4 எக்ஸ் விலை 10 சதவீதத்துக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது. இதே போன்று, ஸ்மார்ட்போன்களில் சேமிப்பகத்திற்கு பயன்படுத்தப்படும் என்.ஏ.என்.டி., பிளாஷ் சிப்களின் விலையும் உயர்ந்துள்ளது. இது நான்காவது காலாண்டில், 5 முதல் 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், கூடுதல் செலவை சமாளிக்க, ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை குறைக்கலாம் அல்லது தயாரிப்பு விலையை உயர்த்தி, அதனை நுகர்வோருக்கு மாற்றலாம். இவ்வாறு தெரிவித்து உள்ளது. * மெமரி சிப் விலை உயர்வை சமாளிக்க, டிஸ்பிளே, குறைந்த தரத்தில் கேமரா என மாற்ற தயாரிப்பாளர்கள் பரிசீலனை * செலவு சமாளிக்க முடியாமல் போகும்பட்சத்தில், ஆரம்ப, நடுத்தர ஸ்மார்ட்போன்களின் விலை உயர வாய்ப்பு * புத்தாண்டு முதல் ஸ்மார்ட்போன் விலையை கணிசமாக உயர்த்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் திட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ