உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிட்டி யூனியன் வங்கி லாபம் 15% உயர்வு

சிட்டி யூனியன் வங்கி லாபம் 15% உயர்வு

சென்னை: கடந்த செப்டம்பர் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து, 329 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிகர லாபம் 285 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி நேற்று வெளியிட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் காலாண்டில், சிட்டி யூனி யன் வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து 329 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் வட்டி வருவாய் 14.40 சதவீதம் வளர்ச்சி கண்டு 666.50 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் 1.20 சதவீதத்திலிருந்து 0.90 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை