உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்தத்க துளிகள்

வர்தத்க துளிகள்

விமான இன்ஜின் தயாரிப்பு ஆர்வம் காட்டும் இந்தியா

அமெரிக்காவை தாண்டி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த தயாரிப்பாளர்களுடன் கூட்டாக இணைந்து, உள்நாட்டில் போர் விமானங்களுக்கான இன்ஜினை தயாரிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக, லண்டனைச் சேர்ந்த 'ரோல்ஸ் ராய்ஸ்' நிறுவனம், பிரான்சின் பாரீஸைச் சேர்ந்த 'சப்ரான்' நிறுவனம் மற்றும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் வாக்கி டாக்கி விற்பனைக்கு புது கட்டுப்பாடு

ஆன்லைன் வணிக தளங்களில் வாக்கி டாக்கி உள்ளிட்ட ரேடியோ உபகரணங்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்த, புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.ஆன்லைனில் சட்ட விரோதமாக வாக்கி டாக்கி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உள்துறை, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில், வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உரிய அலைவரிசை விபரங்கள், உரிமம் அல்லது உபகரணங்கள் வகை ஒப்புதல் உள்ளிட்டவை இன்றி, வாக்கி டாக்கி விற்பனை செய்வது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறுவதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை