வளர்ச்சிக்கு உதவும் வர்த்தக வாகனங்கள்
சென்னை;சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில், சென்னையில் நேற்று, வர்த்தக வாகனங்களுக்கான மாநாடு நடந்தது.இதில், 'டாடா மோட்டார்ஸ்' தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜேந்திர பெட்கர் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தக வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா தன் இடத்தை உறுதிப்படுத்தி வரும் நிலையில், வர்த்தக வாகனங்கள் அனைத்து துறைகளிலும் நிறைந்துள்ளன. வர்த்தக வாகன தொழில் துறை, தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல; டிரைவர் நலன், வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு தரங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட சமூக எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.