கமாடிட்டி
தங்கம், வெள்ளி
ச ர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் புதியதொரு வரலாற்று உச்சத்தை எட்டி வர்த்தகமாகி வருகின்றன. தங்கம் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) 4,050 அமெரிக்க டாலர், வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 49.10 அமெரிக்க டாலர் என உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் உயரத் தொடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், தொடர் உயரவில் 15 முறைக்கு மேல் வரலாற்று உச்சத்தை எட்டின. 1970களுக்குப் பிறகு மிகப்பெரிய உயர்வாக இவை காணப்படுகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமின்மை குறித்த உலகளாவிய அச்சத்தால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை, பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலர் என்பதை தாண்டி உச்சம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2024 ஏப்ரலில், சுங்க வரிகளை அதிகரித்து அறிவித்ததிலிருந்து தங்கத்தின் விலை சுமார் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஆதாரமாகக் கொண்ட நிதி தயாரிப்புகளிலும், உதாரணமாக தங்க இ.டி.எப்., போன்றவற்றிலும் அதிகமாக முதலீடு செய்கின்றனர். உலக தங்கக் கவுன்சில் அறிக்கையின் படி, இந்த ஆண்டில் இதுவரை, தங்க இ.டி.எப்.,-களில் மொத்தம் 64 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு புதிய சாதனையாகும். கே. முருகேஷ் குமார்துணைத்தலைவர்,சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெ