உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜெ.பி., அசோசியேட்ஸை வாங்க போட்டி

ஜெ.பி., அசோசியேட்ஸை வாங்க போட்டி

புதுடில்லி:கடனில் சிக்கித் தவிக்கும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், வேதாந்தா குழுமம் அதிகபட்சமாக 17,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திவால் நிலை செயல்முறைகளை எதிர்கொண்டு வரும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிகர மதிப்பு 12,505 கோடி ரூபாய் என கருதப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த கடன் 59,000 கோடி ரூபாய்க்கு மேல் என வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்கிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, வேதாந்தாவின் ஏலத்துக்கு கடன் வழங்குனர்கள் ஒப்புக்கொண்டாலும், கிட்டத்தட்ட 42,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அடிப்படை ஏல விலை 12,000 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த ஏலத்தில், வேதாந்தா மற்றும் அதானி குழுமங்கள் மட்டுமே பங்கேற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ