உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மீண்டும் உயரும் நுகர்பொருட்கள் விலை

 மீண்டும் உயரும் நுகர்பொருட்கள் விலை

புதுடில்லி: மேற்காசிய போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, உலகளாவிய வினியோக தொடர் பாதிப்பால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், நுகர்வு பொருட்களை தயாரிக்கும் 'எப்.எம்.சி.ஜி.' நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து இத்துறையினர் கூறியதாவது: 'டாபர்' நிறுவனம் பொருட்களின் விலையை 4 சதவீதம் வரை ஏற்கனவே உயர்த்தியுள்ளது. 'பிரிட்டானியா', 10 ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களின் விலையை உயர்த்தவும், எடையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. 'ஹெச்.யு.எல்.,' நிறுவனம் பொருட்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதுதவிர,'வருண் பெவரேஜஸ்' நிறுவனம் வாடிக்கையாளர் தள்ளுபடியை குறைக்கத் தொடங்கியுள்ளதுடன், 'டாடா கன்ஸ்யூமர்', 'நெஸ்லே இந்தியா' ஆகிய நிறுவனங்களும் விலை உயர்வு வரக்கூடும் என்று அறிவித்திருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை