உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலையில் 7 சதவிகிதம் அதிகரிப்பு

நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலையில் 7 சதவிகிதம் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் சரக்கு ஏற்றுமதி, 7.29 சதவீதம் அதிகரித்து 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிவு ஜூலை ஏப்ரல் - ஜூலை ஏற்றுமதி 3.17 12.68 இறக்குமதி 5.49 20.74 வர்த்தக பற்றாக்குறை 2.32 8.06 (ரூ.லட்சம் கோடியில்) சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், இந்திய சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக ஏற்றுமதி வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவின் ஏற்றுமதி அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. பொறியியல் பொருட்கள், மின்னணு பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், மருந்து மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. - சுனில் பர்த்வால் மத்திய வர்த்தக செயலர் Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ