உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எல் அண்டு டி உடன் சி.எஸ்.ஐ.ஆர்., ஒப்பந்தம்

எல் அண்டு டி உடன் சி.எஸ்.ஐ.ஆர்., ஒப்பந்தம்

சென்னை:சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், கட்டுமானங்களுக்கு இரும்பு கம்பிக்கு பதில், உலோகமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட இழை பின்னலால் ஆன, கான்கிரீட் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துஉள்ளது. இதன் வாயிலாக, கட்டடங்களில் அரிப்பு இல்லாத தயாரிப்புகளை உருவாக்க முடியும்.இந்த தொழில்நுட்பம், எல் அண்டு டி., நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கட்டமைப்பு ஆராய்ச்சி மைய இயக்குனர் என்.ஆனந்தவள்ளி மற்றும் எல் அண்டு டி அதிகாரிகள் கையெழுத்திட்டனர். புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஸ்மிதா கோபிநாத் கண்டுபிடித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ