உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முட்டை தினசரி விலை நிர்ணயம் நிறுத்தம்

முட்டை தினசரி விலை நிர்ணயம் நிறுத்தம்

நாமக்கல்: முட்டை விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால், தினமும் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்திய ‘நெக்’, நவ., 28 வரை, தற்போதைய விலையே நீடிக்கும் என அறிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், பறவை காய்ச்சல் தாக்கம், சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், முட்டை, கோழி இறைச்சி நுகர்வு பரவலாக குறைந்துள்ளது. அதன்காரணமாக, முட்டை கொள்முதல் விலை தொடந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக, தினமும் விலை நிர்ணயம் செய்வதை, நேற்று முன்தினம் முதல், நெக் எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, நிறுத்தி உள்ளது. வரும், 28 வரை, தற்போதைய விலையான, 540 காசே நீடிக்கும் என அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ