உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்துவதில் தாமதம்

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்துவதில் தாமதம்

புதுடில்லி: நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்து ஓராண்டாகியும், அவற்றை செயல்படுத்துவதில் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டு வருவதாக, ‘கிராண்ட் தோர்ன்டன் பாரத்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்த பின், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 50.6 சதவீத நிறுவனங்கள் மட்டுமே முழுமையாக இதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. புதிய ஊதிய வரையறையால் பணியாளர் செலவுகள் அதிகரிக்கும் என, 74.4 சதவீத நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செலவுகள் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊதிய பட்டியல் மற்றும் சட்ட விதிமுறை மாற்றங்களே முக்கிய சவாலாக இருப்பதாக, 73.5 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பணியிலிருந்து விலகும் ஊழியர்களுக்கான இறுதி சம்பளத்தை இரண்டு வேலை நாட்களுக்குள் வழங்கும் நடைமுறையை, 38.8 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அமல்படுத்தியுள்ளன. ஊதியம், சமூக பாதுகாப்பு, தொழில் துறை உறவுகள், பணியிட பாதுகாப்பு ஆகிய 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக ஒருங்கிணைக்கப்பட்டு, 2025 நவ., 21ல் அமலுக்கு வந்தன. இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை