உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டில்லி பொம்மைகள் கண்காட்சி

டில்லி பொம்மைகள் கண்காட்சி

குழந்தைகளை கவரும் ஜே.சி.பி.,

டெல்லியில் நடைபெறும் 16 வது பொம்மைகள் கண்காட்சியில், ஜே.சி.பி., பொம்மைகள் அதிக வர்த்தக விசாரணைகளைப் பெற்றன. கார், ஜீப் போன்றவை மீது தான் குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கும் என்ற எண்ணத்தை இனி மாற்றிக் கொள்ள வேண்டும். பலவிதமான ஜே.சி.பி., இயந்திர பொம்மைகள் அரங்கில் இடம்பிடித்திருந்தன. ஒவ்வொன்றும் பதினைந்தாயிரம், இருபதாயிரம் ரூபாய். இப்போது இதற்கு டிமாண்டு அதிகரித்து வருகிறது என்றார்கள்.

மணிக்கு 50 கி.மீ., வேகம்

இப்போதைய தலைமுறைக்காக, பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மிரானா நிறுவனத்தின் தயாரிப்பு இந்த ரிமோட் கார். பொம்மை கார் என்றாலும் மிரட்டல் வேகத்தில் பாய்ந்து செல்கிறது.சிறப்பம்சங்கள் அதிகபட்ச வேகம் மணிக்கு 36 கி.மீ., மற்றும் 50 கி.மீ.,  பூஜ்ஜியத்திலிருந்து அதிகபட்ச வேகம் எட்ட 1.58 விநாடிகள் மட்டுமே டயர்கள் 9 செ.மீ. உயரம் மற்றும் 5 செ.மீ. தடிமன்  அதிகபட்ச வேகத்தில்இருந்து 0.15 விநாடிகளில் நிறுத்திடலாம் கற்கள், மணல் என எந்த பாங்கான தளத்திலும் ஓடும் இந்தியாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டது.சிறு தயாரிப்பாளர்களை கவனியுங்கஎங்கள் கோரிக்கைகள் இரண்டு. நாங்கள் தயாரிக்கும் கைவினை பொம்மைகளை போலவே சீன போலி பொம்மைகள் குறைந்த விலையில் இறக்குமதி ஆகின்றன. குறைந்தபட்சம் இதையாவது தடுத்து விட்டு, எங்களை அரசு ஊக்குவிக்கட்டும்.இரண்டாவது, இதுபோன்ற வர்த்தக கண்காட்சியில் பெருவணிகர்களும் கலந்து கொள்வதால் சிறிய கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களின் அரங்குகள் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை. எனவே, கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு என ஆண்டுதோறும் நாடு முழுக்க பிரத்யேகமாக கண்காட்சியை அரசு நடத்த வேண்டும்.மதன் மேக்வால் கைவினை கலைஞர், ராஜஸ்தான்பிளாஸ்டிக் பொம்மைகளுக்கான இந்த இன்ஜெஷன் மோல்டிங் இயந்திரம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.விலை 22 லட்சம் ரூபாய். பிளாஸ்டிக் பொம்மைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கான தேவையும் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள், இதன் தயாரிப்பாளர்களான ஹரியானாவைச் சேர்ந்த நீல்கிரி குழுமத்தினர்.

ஆர்டர் கொடுக்க வந்தோம்

சென்னையில் துவங்கப்பட்ட எங்களது தொண்டு நிறுவனம் சார்பாக, டில்லியில் வறுமை நிலையில் உள்ள 16,000 குழந்தைகளுக்காக பொம்மைகள் ஆர்டர் கொடுக்க வந்தோம். தேர்ந்தெடுத்தஒவ்வொன்றிலும் ஆயிரம் முதல் 2000 வரை ஆர்டர் செய்துள்ளோம்.- சார்லஸ் தலைவர், 'தாகம்' தொண்டு நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை