மேலும் செய்திகள்
சமையல் எண்ணெய் இறக்குமதி சரிவை சந்தித்த பாமாயில்
15-Jan-2025
சென்னை:அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதில் இடம்பெற வேண்டிய அம்சங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.சாரி கூறியதாவது: பட்ஜெட்டில், 'பிரின்ட்டட் சர்க்யூட் போர்டு' போன்றவற்றின் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைவாகவும், வரி விதிப்பு எளிமையாகவும் இருக்க வேண்டும் ஒரு பொருளை இறக்குமதி செய்து, அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யும் போது, இறக்குமதி செய்த பொருளுக்கு, 'டியூட்டி டிரா பேக்' எனப்படும் இறக்குமதி செய்ததற்கு செலுத்தப்பட்ட வரியில் சலுகை பெறும் வசதி உள்ளது. இதை பெற தாமதமாகிறது. அந்த சலுகையை குறித்த காலத்தில் பெறுவதற்கு கால நிர்ணயம் செய்யும் அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு, மின்சாரம் போன்றவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் அறிவிப்பை வெளியிட வேண் டும். இது, தொழில் நிறு வனங்களுக்கு எரிபொருள் செலவை குறைக்கும். சுங்க வரி தொடர்பாக, நிறுவனங்கள் தொடர்ந்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சமாதான திட்டம் கொண்டு வந்து, விரைவாக தீர்வு காணும் அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
15-Jan-2025