உள்நாட்டு தேவை உயர்வால் ‘காஸ்டிக் சோடா’ விற்பனை அதிகரிக்கும்
‘காஸ்டிக் சோடா’ தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை வருவாய், நடப்பாண்டின் டிசம்பர் காலாண்டில் மேலும் அதிகரிக்கும் என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., மதிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜவுளி, ரசாயனம், அலுமினியம் உள்ளிட்ட தொழில்களில் காஸ்டிக் சோடாவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டு விற்பனை உயர வாய்ப்புள்ளது. காஸ்டிக் சோடாவிலிருந்து தயாரிக்கப்படும் பிற ரசாயனங்கள், சிறப்பு ரசாயனப் பொருட்களின் வர்த்தகமும் நிறுவனங்களின் வருவாய்க்கு உதவும். அதேநேரத்தில், காஸ்டிக் சோடா விலை குறைந்து வருகிறது. மின்சாரம், உப்பு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகளும் அதிகமாக உள்ளன. இதனால், விற்பனை உயர்ந்தாலும் லாப விகிதத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு. கடந்த செப்டம்பர் காலாண்டில் இத்துறையின் விற்பனை வருவாய் 22.40 சதவீதமும், செயல்பாட்டு லாபம் 34.40 சதவீதமும் உயர்ந்திருந்தன. காஸ்டிக் சோடா உற்பத்தியுடன் தொடர்புடைய குளோரின் விலையும் நிறுவனங்களின் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை வளர்ச்சி
12 சதவீதம் வரைடிசம்பர் காலாண்டில் காஸ்டிக் சோடா நிறுவனங்களின் விற்பனை வருவாய் அதிகரிக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பிட்டுள்ளது.உள்நாட்டு தேவை7.7 சதவீதம்டிசம்பர் காலாண்டில் உள்நாட்டில் காஸ்டிக் சோடா பயன்பாடு அதிகரிக்கும். அதேபோல், உற்பத்தி 4.8 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இறக்குமதி அதிகரிப்பு21 சதவீதம்தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சரிந்த காஸ்டிக் சோடா இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் மீண்டும் உயர்ந்து, 85,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காஸ்டிக் சோடா
காஸ்டிக் சோடா என்பது 'சோடியம் ஹைட்ராக்சைடு' எனப்படும் ரசாயனம். பல்வேறு தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.ஜவுளி: துணிகளை சுத்திகரித்தல், சாயமிடுவதற்கு தயார்படுத்துதல்.அலுமினியம்: பாக்சைட் தாதுவில் இருந்து அலுமினாவை பிரித்தெடுத்தல்.ரசாயனம்: சோப்பு, சலவைப்பொருட்கள் மற்றும் பிற ரசாயனங்கள் தயாரித்தல்.