உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துளிகள் சைபர் பாதுகாப்பு ரயில்வே - ஏர்டெல் ஒப்பந்தம்

துளிகள் சைபர் பாதுகாப்பு ரயில்வே - ஏர்டெல் ஒப்பந்தம்

ர யில்வே துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள் சுமுகமாக தொடர்வதை உறுதி செய்வதற்கான பணிகளுக்காக, இந்திய ரயில்வே பாதுகாப்பு செயல்பாட்டு மையத்திடம் இருந்து ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக ஏர்டெல் பிஸினஸ் அறிவித்து உள்ளது. இதன்படி, ஏர்டெல் நிறுவனம், ஒருங்கிணைந்த பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவி, ரயில்வேயின் பல்வகை தரவுகளை பன்னடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரும். பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான சோகோமெக், இந்தியாவில் புதிய ஆலை அமைக்க 88 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. ஏற்கனவே குருகிராமில் இரண்டு ஆலைகள் முழு திறனுடன் இயங்கி வரும் நிலையில், புதிய ஆலை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்தியாவின் சோலார் டி.சி., சுவிட்ச் கியர் பிரிவில் சோகோமெக் நிறுவனம், 55 சதவீத பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி