துளிகள்
கூகுள் அபராதம் குறைப்புப்ளே ஸ்டோர் கொள்கை கள் தொடர்பாக, கூகுள் தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக, இந்திய போட்டிகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. மேலும், கூகுளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 936 கோடியில் இருந்து, 217 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.நிதி பற்றாக்குறை 85.80 சதவீதம் சி.ஜி.ஏ., எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளரின் தரவுகளின்படி, மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், அதன் இலக்கில் 85.80 சதவீதத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் சங்க தலைவர்இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக, எஸ்.பி.ஐ.,யின் சி.எஸ்.செட்டியை நிர்வாகக்குழு தேர்ந்தெடுத்துள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்டி, அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆண்டு பொதுக்கூட்டம் வரை சங்கத்தை வழிநடத்துவார்.