உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  12 சதவிகிதம் வளர்ச்சியில் இ- - வே பில்

 12 சதவிகிதம் வளர்ச்சியில் இ- - வே பில்

புதுடில்லி: நாடு முழுதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ், 'இ- - வே பில்' பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து 13.33 கோடியாக உயர்ந்துள்ளதாக, ஜி.எஸ்.டி.என்., அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட சரக்குகளை கொண்டு செல்ல, 'இ- - வே பில்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் 'இ- - வே பில்கள்' முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 5.10 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தான் அதிகபட்சமாக 14.06 கோடி 'இ- - வே பில்' வழங்கப்பட்டுள்ளது என, ஜி.எஸ்.டி.என்., தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகள், நாட்டின் சரக்கு வினியோகம் மற்றும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுவதாகவும், நடப்பு நிதியாண்டில் தனியார் இறுதி நுகர்வு செலவினம் 7.60 சதவீதமாக இருக்கும் எனவும், 'இந்தியா ரேட்டிங்ஸ்' நிறுவனம் கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை