உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜப்பான் ஜவுளி நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க முயற்சி

ஜப்பான் ஜவுளி நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க முயற்சி

சென்னை:மத்திய அரசு, 'பி.எம்.,மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, தமிழகத்தில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பூங்கா அமைக்க, விருதுநகர் மாவட்டத்தில், 1,052 ஏக்கர் நிலத்தை, 'சிப்காட்' நிறுவனம் வழங்கியுள்ளது. இதுவே, நாட்டின் முதல் மாபெரும் ஜவுளி பூங்கா என்ற அந்தஸ்தை பெறுகிறது. இங்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், 2,000 கோடி ரூபாய் செலவில், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஜப்பானை சேர்ந்த 'யுனிக்லோ' ஆடை நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதுதொடர்பாக, மத்திய ஜவுளி துறையினருடன், இந்நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். இந்நிலையில், யுனிக்லோவின் முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்க்கும் நடவடிக்கையில், மாநில தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னையில் தமிழக தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்தியாவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. யுனிக்லோ நிறுவனத்தின் முதலீட்டையும் விருதுநகர் ஜவுளி பூங்காவில் ஈர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ