உலகின் முதல் ட்ரில்லியனராக எலான் மஸ்க்குக்கு வாய்ப்பு
புதுடில்லி,:டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில், ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பை வைத்திருந்தால் ட்ரில்லியனர் என்று அழைக்கப்படுவார்கள். இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பில் இது 88 லட்சம் கோடி ரூபாயாகும். டெஸ்லாவின் எதிர்கால வளர்ச்சியை பொறுத்து எலான் மஸ்க்குக்கு கூடுதல் பங்கு வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை, அந்நிறுவனம் முன்மொழிந்துள்ளது. மொத்தம் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், டெஸ்லாவில் மஸ்க்கின் பங்கு அதிகரிக்கும். எனினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. டெஸ்லாவின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிப்பதில் இருந்து, மஸ்க்குக்கு கூடுதல் பங்கு வழங்கப்படும். தற்போது டெஸ்லாவின் சந்தை மதிப்பு 1.10 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.