அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு செப்டம்பரில் 2 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவில் அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு, செப்டம்பர் மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'நௌக்ரி' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அலுவலக பணிகளுக்கான மாதாந்திர 'ஜாப்ஸ்பீக்' குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 3,053 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 3,002 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் நிறுவன பணிகளுக்கான வேலைவாய்ப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹைதராபாத் 9 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில், சென்னை 6 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மற்றும் கொல்கட்டா தலா 4 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த இடத்திலும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் வேலைவாய்ப்பு இதுவரை இல்லாத அதிகபட்ச அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உயர்வு *ஏ.ஐ., இயந்திர கற்றல்: 20% *ஆட்டோமொபைல்: 11% மாற்றமில்லாத துறைகள்: காப்பீடு, சில்லறை விற்பனை, வங்கி மற்றும் நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் வேலைவாய்ப்பு சரிந்த துறைகள்
வாடிக்கையாளர் சேவை: 11% சுற்றுலா துறை: 11% கல்வி துறை: 18% மென்பொருள் சேவைகள்: 4% நுகர்வோர் பொருட்கள் விற்பனை:4% சுகாதாரத் துறை: 3% நகரங்களின் நிலை டெல்லி:6% (சரிவு) மும்பை:6% (சரிவு) ஹைதராபாத்:9% (உயர்வு) சென்னை: 6% (உயர்வு)