அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் கவலை
“அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கைகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கவலை அளிக்கின்றன. இருப்பினும், இது குறித்து பேச்சு நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் குறைந்த வரியை பெறவும் வாய்ப்புள்ளது. இந்திய அரசு அமெரிக்காவிடம் வலுவான வாதங்களை முன்வைத்து, ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான முடிவை பெற்று தரும் என நம்புகிறோம்.” – அஜய் சஹாய், தலைமை இயக்குனர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு