உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்:நடப்பு நிதியாண்டின் துவக்கமாகிய ஏப்ரல் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 15 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2024 பிப்., மாதம் முதல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த நிதியாண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஏற்றுமதி நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்., மாதமும் 15 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமல்லாது, பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதியாகியுள்ளது.இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், ''அமெரிக்க வரி உயர்வு, வங்கதேசத்தின் உள்நாட்டு குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகளால், சர்வதேச சந்தை வாய்ப்புகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் ஈர்த்து வருகின்றனர். நடப்பு நிதியாண்டிலும், அத்தகைய முயற்சி வெற்றி பெறும். சீரான வளர்ச்சி இருந்தால், திருப்பூர் 'கிளஸ்டர்ன்' ஏற்றுமதி இலக்கு, 50,000 கோடி ரூபாயை எட்டுவதில் எவ்வித தடையும் இல்லை,'' என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''பிரிட்டன் ஒப்பந்தத்தால், அந்நாட்டுக்கான திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, நடப்பாண்டில் இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடைகளின் பங்களிப்பு 60 சதவீதத்தை நெருங்கியுள்ளது,'' என்றார்.ஆயத்த ஆடை ஏற்றுமதிஏப்ரல் 2023: ரூ.9,995 கோடிஏப்ரல் 2024: ரூ.9,931 கோடி ஏப்ரல் 2025: ரூ.11,733 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !