அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 5.57 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 5.57 சதவீதம் அதிகரித்து 5.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சந்தையின் வலுவான தேவை காரணமாக, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 5.57 சதவீதம் அதிகரித்து 5.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டிசம்பரில் ஏற்றுமதி 8.49 சதவீதம் அதிகரித்து 60,200 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.அதேநேரம், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் இறக்குமதிகள் 1.91 சதவீதம் அதிகரித்து 2.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசம்பரில் 9.88 சதவீதம் அதிகரித்து 32,422 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், இருதரப்பு வர்த்தகம் மதிப்பீட்டு காலத்தில் 8.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.