மேலும் செய்திகள்
பருத்தி இறக்குமதி: பார்முலா உருவாக்க கோரிக்கை
03-Jun-2026
புதுடில்லி: சர்வதேச சந்தையில் யூரியா விலை கடந்த ஓராண்டில் சராசரியாக 141 சதவீதம் உயர்ந்துள்ளதால், மத்திய அரசுக்கு உர மானிய சுமை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காசிய போர் மற்றும் உலகளாவிய வினியோக தடங்கல்களால் யூரியா, டி.ஏ.பி., மற்றும் பாஸ்போரிக் அமிலம் போன்ற முக்கிய உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் தாக்கம் இந்தியாவின் உர இறக்குமதி செலவிலும் பிரதிபலித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tfsx6d6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, நடப்பு 2026 - 27 நிதியாண்டிற்கான உர மானியத்தை கணக்கிடுவதில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசின் உர மானிய செலவு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட யூரியா இறக்குமதி டெண்டரில் விலைகள் கணிசமாக குறைந்திருப்பது, எதிர்காலத்தில் மானிய சுமையை ஓரளவு குறைக்க உதவக்கூடும்; ஆனால், அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
03-Jun-2026