மேலும் செய்திகள்
அதிக சரக்கு ஏற்றுமதி காஞ்சிபுரம் 2ம் இடம்
1 hour(s) ago
ஸ்டீல் பொருட்கள் இறக்குமதி 3 ஆண்டுகளுக்கு வரி விதிப்பு
1 hour(s) ago
மூன்று மாவட்டங்களில் மினி டைடல் பார்க்
1 hour(s) ago
புதுடில்லி: பிரிஜ், 'டிவி' காஸ் அடுப்பு, ஏர் கூலர் ஆகியவற்றுக்கு நட்சத்திர தரக்குறியீடு பெறுவதை மத்திய அரசு இன்று முதல் கட்டாயமாக்கியுள்ளது. எனவே, இப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நட்சத்திர குறியீடு பெறாமல் இவற்றை விற்பனை செய்ய இயலாது. பொருட்களின் எரிசக்தி திறனை உணர்த்தும் இந்த தரக்குறியீடு டீப் ப்ரீசர்ஸ், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் சோலார் இன்வெர்டர்களுக்கும் பொருந்தும் என, பி.இ.இ., எனும் எரிசக்தி திறன் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த பொருட்களுக்கு நட்சத்திர குறியீடு பெறுவது நிறுவனங்களின் விருப்பத் தேர்வாக இருந்தது. கட்டாய நட்சத்திர குறியீடு பட்டியல் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவது வழக்கம் என்றும், பொருட்களின் எரிசக்தி திறனை மேம்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின்சார சீலிங் பேன், எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், 'ஏசி' ஆகியவற்றுக்கு நட்சத்திர தரக்குறியீடு பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago