மேலும் செய்திகள்
ரஷ்ய கச்சா எண்ணெய் இந்திய நிறுவனங்கள் விடாப்பிடி
18-Dec-2025
புதுடில்லி: கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு, 2.17 கோடி டன்னாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 5.30 சதவீதம் அதிகமாகும். கடந்த 1998ல் எரிபொருள் நுகர்வு குறித்த தரவுகள் சேகரிக்க துவங்கப்பட்டது முதல், இதுவே அதிகபட்ச மாதாந்திர பயன்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி நாடாக விளங்கும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை குறைக்காவிட்டால் இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தக்கூடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதையடுத்து, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த மாதத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது. எனினும், போதிய இருப்பு காரணமாக, எரிபொருள் வினியோகத்தில் தடை ஏற்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. டிசம்பர் 2025 நிலவரம் (முக்கிய எரிபொருட்கள்) வகை விற்பனை (லட்சம் டன்னில்) ஆண்டு ஒப்பீட்டில் உயர்வு (%) பெட்ரோல் 35.06 7.10 டீசல் 84.60 5.00 சமையல் எரிவாயு 30.80 11.20
18-Dec-2025