உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக வைர சந்தை: சீனாவை விஞ்சிய இந்தியா

உலக வைர சந்தை: சீனாவை விஞ்சிய இந்தியா

புதுடில்லி,:உலக வைர சந்தையில், சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து வைர வணிகத்தின் இந்திய அமைப்பான, ஜெம் அண்டு ஜுவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:உலகின் வைர சந்தை, கடந்த ஆண்டு இறுதியில் 7.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில் இந்தியாவின் இயற்கை வைரங்கள் சந்தை கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாயாகும். தவிர, ஆய்வகங்களில் பட்டை தீட்டப்படும் வைர சந்தையின் மதிப்பு, 17,000 கோடி ரூபாய். இன்னும் ஐந்து ஆண்டுகளில், உலகின் வைர சந்தை மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயை தொடவுள்ள நிலையில், இந்தியாவின் வைர வணிக மதிப்பு இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைர வணிகத்தில் ரஷ்யா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ