உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க பத்திர முதலீடு கிராமுக்கு ரூ.8,499 கிடைக்கும்

தங்க பத்திர முதலீடு கிராமுக்கு ரூ.8,499 கிடைக்கும்

புதுடில்லி:ரிசர்வ் வங்கியால், கடந்த 2019 -- 20ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஒன்பதாம் கட்ட தங்கப் பத்திர கணக்கை, முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 8,499 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து எட்டு ஆண்டுகளில், முதலீடு முழுதுமாக முதிர்வடையும். எனினும், ஐந்து ஆண்டு களுக்குப் பிறகே, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படும். இதன்படி, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரங்களை, நேற்று முதல் முதிர்வு காலத்துக்கு முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.இவ்வாறு திரும்பப் பெற விண்ணப்பித்தவர்களுக்கு, 1 கிராம் தங்கத்துக்கு 8,499 ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துஉள்ளது. கடந்த பிப்ரவரி 6, 7 மற்றும் 10ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டு, இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி