உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடி துறைமுகத்துக்கு பசுமை ஹைட்ரஜன் அங்கீகாரம்

துாத்துக்குடி துறைமுகத்துக்கு பசுமை ஹைட்ரஜன் அங்கீகாரம்

சென்னை:காற்று மாசை அறவே தவிர்க்கும் குறிக்கோளுக்கு ஏற்ப, தமிழகத்தின் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உட்பட மூன்று துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் மையங்களாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. நம் நாட்டை 2070ம் ஆண்டுக்குள் ஜீரோ காற்று மாசு என்ற நிலையை அடைய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். அதில் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், நாட்டின் மூன்று துறைமுகங்களை, அறவே மாசற்ற, பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அரசு அங்கீகரித்துள்ளதாக கூறினார். அதன்படி, தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், குஜராத்தின் தீனதயாள் துறைமுக ஆணையம் மற்றும் ஒடிஷாவின் பாரதீப் துறைமுக ஆணையம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கிளஸ்டர் எனப்படும் தொகுப்பு அடிப்படையிலான வளர்ச்சி மாடலில் பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இது ஒருங்கிணைந்த தொழிற்துறை பங்கேற்புடன், துாய எரிபொருள் தொழில்நுட்பத்தில் முதலீடுகளை ஈர்ப்பதை ஊக்குவிக்கிறது. ஹைட்ரஜன் வேலி இன்னொவேஷன் கிளஸ்டர் என்பதன் வாயிலாகவும் கிரீன் ஹைட்ரஜன் ஹப் என்பதன் வாயிலாகவும் பசுமை திட்டங்களில் முதலீடு, தொழிற்துறையின் பங்கேற்பை அதிகரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி