ஜி.எஸ்.டி., கண்காணிப்பு தீவிரம்
புதுடில்லி: ஜி.எஸ்.டி., ஏய்ப்பு தொடர்பாக புகாரில், ஹோட்டல்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் சுற்றுலா தளங்கள், ஜி.எஸ்.டி., அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள், முன்பதிவு, வாடிக்கையாளர் செலுத்திய தொகை, கமிஷன் மற்றும் ஹோட்டல்களுக்கு செலுத்திய தொகை தொடர்பாக விபரங்களை அளிக்குமாறு ஆன்லைன் தளங்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆன்லைன் தளங்கள் முன்பதிவுக்கு ஹோட்டல்கள் தாங்கள் பெறும் தொகையைச் சரியான ஜி.எஸ்.டி.,யை அறிவிக்கிறார்களா? என்பதையும், வாடிக்கையாளர் ஆன்லைன் தளத்திற்குச் செலுத்திய மொத்த தொகைக்கா அல்லது அந்தத் தளத்தின் கமிஷன் தொகையைக் கழித்த பின், ஹோட்டலுக்கு செலுத்திய மீதி பணத்திற்காகவா என்ற குழப்பத்தை தீர்க்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.