சோழிங்கநல்லுாரில் எச்.டி., சப்ளை சர்வதேச மையம்
சென்னை:வட அமெரிக்காவைச் சேர்ந்த, 'எச்.டி., சப்ளை' நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் செயல்பாட்டு வினியோக சிறப்பு கட்டுமான தொழில்களில், தொழில்முறை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. இந்நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக ஜி.சி.சி., எனப்படும் சர்வதேச திறன் மையமான சர்வதேச தொழில்நுட்ப மையத்தை, சென்னை சோழிங்கநல்லுாரில் அமைத்துள்ளது. இதை, தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று துவக்கி வைத்தார். இந்த மையம், டிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., வாயிலான பகுப்பாய்வு, செயல்முறை ஆட்டோமேஷன், கண்டு பிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.