உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8,000 கோடியில் ஹெலிகாப்டர் ஆலை

ரூ.8,000 கோடியில் ஹெலிகாப்டர் ஆலை

மும்பை:மேக்ஸ் ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன் நிறுவனம், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், அதிநவீன ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக, அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக, அடுத்த எட்டு ஆண்டுகளில், 8,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய, மேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக 2,000க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது-. இந்த ஆலைக்கான கட்டுமானம் 2026ல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை