உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் மற்ற நகரங்களைவிட சென்னையில் வீடுகள் விலை குறைவு

நாட்டின் மற்ற நகரங்களைவிட சென்னையில் வீடுகள் விலை குறைவு

புதுடில்லி:சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா உள்ளிட்ட நாட்டின் முக்கிய ஒன்பது நகரங்களில் கடந்த நிதியாண்டில், வீடுகளின் விலை சராசரியாக 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'பிராப் ஈக்விட்டி' தெரிவித்துள்ளது. மேலும் நாட்டிலுள்ள முக்கியமான ஒன்பது நகரங்களில், சென்னையில் தான் வீடுகளின் விலை குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அறிக்கையில் முக்கிய விபரங்கள்:

* கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக கொல்கட்டாவில் ஒரு சதுர அடி விலை 29 சதவீதம் அதிகரிப்பு* மும்பை, நவி மும்பையில் 3 சதவீதம் குறைந்துள்ளது * முக்கிய ஒன்பது நகரங்களில், வீடுகளின் விலை சராசரியாக 12 சதவீதமும்; மூன்று நிதியாண்டுகளில் 18 சதவீதமும் அதிகரித்து உள்ளது* கடந்த ஜனவரி - மார்ச் காலத்தில் இந்த நகரங்களில் வீடு விற்பனை 23 சதவீதம் சரிந்து, 1.06 லட்சமாக குறைந்தது * இதே காலத்தில் வீடுகளின் வினியோகம் 34 சதவீதம் சரிந்து 80,774 ஆக குறைந்தது.

சென்னை

* கடந்த நிதியாண்டில் சதுர அடி விலை 4 சதவீதம் அதிகரிப்பு* சராசரியாக ஒரு சதுர அடி 7,989 ரூபாயாக உள்ளது* ஒன்பது நகரங்களில் சென்னையில் தான் விலை குறைவு* அதிகபட்சமாக மும்பையில் 34,026 ரூபாயாக உள்ளது.

நகரங்கள் சதுர அடி விலை (ரூ.) மாற்றம் (%)

கடந்த நிதியாண்டு மூன்று நிதியாண்டுகளில்மும்பை 34,026 3 (சரிவு) 11டில்லி தேசிய தலைநகர் பிராந்தியம் 14,020 5 20தானே 12,880 17 23நவி மும்பை 12,855 3 (சரிவு) 13புனே 10,832 10 18பெங்களூரு 9,852 15 44ஹைதராபாத் 8,306 5 5கொல்கட்டா 8,009 29 29சென்னை 7,989 4 25


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shekar
ஏப் 13, 2025 09:46

அதுக்கு வேற ஒன்னும் காரணம் இல்லிங்க, இன்னிக்கு நாம நம்ம பேருக்கு பத்திரம் பதிந்து வாங்குவோம். கொஞ்சநாள்ல ஒருத்தன் வந்து இது உன் வீடு இல்லை காலிபண்ணு, அப்படின்னு நாலு தடி தாண்டவராயன், நாலு சொர்ணாக்காகூட வீட்டுக்குள் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணுவான். இது விடியல்பூமி இல்லிங்களா. அதனால ஒரு பாதுகாப்புக்கு வேறுமாநிலத்தில் முதலீடு செய்யுறாங்க


Bhaskaran
ஏப் 13, 2025 08:42

சும்மாவயித்தெறிச்சலை கிளப்பாதீங்கப்பா


Pollachi tamilan
ஏப் 13, 2025 08:21

இதுல இருந்து என்ன தெரியுது என்றால் கடந்த 60 வருடங்களாக இந்த திராவிட மாடல் சிங்கார சென்னை என்று சொன்னதெல்லாம் பொய்யா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை