எச்.பி., - டிக்சன் கூட்டு
புதுடில்லி:எச்.பி., இந்தியா நிறுவனம், 'டிக்சன்' நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த மாதம் முதல், உள்நாட்டில் லேப்டாப், கணினி தயாரிக்கும் பணிகளை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில், டிக்சன் நிறுவனம் அமைத்து வரும் ஆலையில், உற்பத்தி பணிகள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்திக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் பயன்பெற, எச்.பி., நிறுவனமும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.