உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்க இலக்கு 2030க்குள் இலக்கை எட்ட தீவிரம்

பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்க இலக்கு 2030க்குள் இலக்கை எட்ட தீவிரம்

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை பூளவாடியில், மத்திய அரசு, சேலம், மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்துப்பட்டறை நடந்தது.இதில், மைசூரு மத்திய பட்டு வளர்ப்பு மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் காந்திதாஸ் பேசியதாவது:தற்போது ஆண்டுக்கு, 40,000 டன் பட்டு நுால் உற்பத்தி செய்து வருகிறோம். உலகளவில் பட்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2030க்குள் இந்தியா முதலிடத்திற்கு வருவதற்கான இலக்கு நிர்ணயித்து, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழக பட்டு விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, 100 முட்டை தொகுதிக்கு 100 கிலோ என்ற முழுமையான உற்பத்தியை எடுக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.சீனாவிலும், வட மாநிலங்களிலும், பட்டு புழுக்கள் உணவாக பயன்படுத்தப்படுகின்றன. அதன் புரதச் சத்தை அடிப்படையாக கொண்டு, பிஸ்கட், ஊறுகாய் என உணவு பொருட்கள் தயாரிக்க ஆய்வு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழி ஏற்படும்.இவ்வாறு பேசினார்.பெங்களூரு, மத்திய பட்டு வாரிய இயக்குனர் மந்திரமூர்த்தி பேசுகையில், “இந்திய அளவில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு பட்டு வளர்ச்சிக்கு என, தமிழகத்திற்கு ஐந்தாண்டுகளில் 145 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்து, 'கார்ப்பரேட்' முறையில் உற்பத்தி செய்தால், உலக அளவில் முதலிடம் பெற முடியும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை