மேலும் செய்திகள்
எளிதாக வங்கிக்கடன்: ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
13-Jun-2025
புதுடில்லி:ஜப்பானின் ஆடை சந்தையில், சீனாவின் பங்கு குறைந்து வரும் நிலையில், அதை இந்தியாவால் நிரப்ப முடியும் என ஏ.இ.பி.சி., எனும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துஉள்ளது.இதுகுறித்து கவுன்சிலின் தலைவர் சுதிர் சேக்ரி தெரிவித்ததாவது:டோக்கியோவில், வரும் 15 முதல் 17ம் தேதி வரை, 'இந்தியா டெக்ஸ் டிரெண்ட் பேர்' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. அதில், இந்தியாவிலிருந்து 150க்கும் அதிகமான ஆடை ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு, தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். கவுன்சிலின் சார்பாக ஒரு உயர்மட்ட குழுவும் அதில் பங்கேற்க உள்ளது. அப்போது ஜப்பானுக்கான ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும், அந்நாட்டின் முன்னணி பிராண்டுகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.ஜப்பானுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்வதில் சீனா முன்னணி வகிக்கிறது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பங்கு குறைந்து வருகிறது. இந்த இடைவெளியை இந்திய ஏற்றுமதியாளர்களால் நிரப்ப முடியும். ஜப்பானிய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளதன் வாயிலாக, அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நன்றாகப் பயன்படுத்த முடிகிறது.ஜப்பானைச் சேர்ந்த ஆடை இறக்குமதி நிறுவனங்கள், விலை, தரம் மற்றும் விரைவாக நிறைவேற்றப்படும் ஆர்டர்களை எதிர்பார்க்கின்றனர். இந்திய நிறுவனங்களால் இதை நிறைவேற்ற முடியும். சிறிய அளவிலான, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 200 ஆடைகளிலிருந்து, ஒரே மாதிரியான 3 லட்சம் ஆடைகள் வரை ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.
இதில் 1,993 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் இந்தியா 1 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது.
13-Jun-2025