உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இந்தியா மூன்று மடங்கு வளர்ச்சி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இந்தியா மூன்று மடங்கு வளர்ச்சி

புதுடில்லி:புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து 232 ஜிகாவாட்டாக உயர்ந்து உள்ளது. இந்தியா கடந்த பத்தாண்டுகளில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் மூன்று மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2014 மார்ச் மாதத்தின் 75.52 ஜிகாவாட்டுடன் ஒப்பிடுகையில், நிறுவப்பட்ட பசுமை எரிசக்தி திறன் 232 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இதன் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா உலகளாவிய முன்னணியில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ல், இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி திறன் 2.82 ஜிகா வாட்டில் இருந்து, தற்போது 108 ஜிகா வாட்டாக பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல, 2014ல் 21 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை மின் சக்தி திறன், தற்போது 51 ஜிகா வாட்டாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துஉள்ளது. இதையடுத்து, முன்னதாக 2024 ஏப்ரல் மாதத்தில், காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தி செய்யும் நாடுகளில், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறியது என தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ