உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.600 கோடியில் ஓசூரில் தொழில் பூங்கா

ரூ.600 கோடியில் ஓசூரில் தொழில் பூங்கா

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஈ.எஸ்.ஆர்., நிறுவனம், 600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் பூங்கா அமைக்க உள்ளது. ஆசிய - பசிபிக் பகுதியை மையமாக கொண்ட ஈ.எஸ்.ஆர்., நிறுவனம், மேம்பட்ட தொழில் பூங்கா அமைப் பதற்காக ஓசூரில், 85 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. அங்கு, ஏ 'கிரேட்' தரத்தில், 21 லட்சம் சதுர அடியில் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக, 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. மேம்பட்ட உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி, மின் வாகனங்கள், பசுமை மின் திட்டங்கள், வான்வெளி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, தொழில் பூங்காவில் இடவசதி வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ