உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் வளர்ச்சி திட்ட ஆலோசனை ‘சிப்காட்’ நிறுவனங்களுக்கு அழைப்பு

தொழில் வளர்ச்சி திட்ட ஆலோசனை ‘சிப்காட்’ நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழகத்தில், மாவட்ட அளவிலான தொழில் வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க, தொழில்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘சிப்காட்’ தொழில் பூங்காக்களில் செயல்படும் நிறுவனங்களுடன் வரும், 10ம் தேதி ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை வரும், 2036க்குள், 1.50 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க, தொழில் துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தின், மாம்பாக்கம், ஒரகடம், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, வல்லம் வடகால், திருமுடிவாக்கம் ஆகிய, ‘சிப்காட்’ எனப்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவன தொழில் பூங்காக்களில் செயல்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !