உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஆவண புதுப்பிப்பு கட்டணம் விலக்கு அளிக்க வலியுறுத்தல்

 ஆவண புதுப்பிப்பு கட்டணம் விலக்கு அளிக்க வலியுறுத்தல்

சென்னை:'எம்.ஓ.டி., எனப்படும் ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரத்தை, ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கான பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோருக்கு, அரசின் சிறுதொழில்கள் சங்கமான, 'டான்ஸ்டியா'கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது: வங்கிகளில் கடன் பெறுவதற்காக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது அசையா சொத்துக்களை பிணையாக அடமானம் வைக்கும் போது, எம்.ஓ.டி., மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான ஆவண பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் பதிவு நடை முறைக்காக, 48,000 ரூபாய் வரை செலவாகிறது. இந்த தொகை சிறு, குறுந்தொழில் களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. பின், கடன் வழங்கும் வங்கியையோ அல்லது அடமானம் வைக்கப்பட்டு உள்ள சொ த்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கடன் தொகை மட்டும் மாற்றம் இருக்கும் நிலையில், எம்.ஓ.டி.,யை ஆண்டுதோறும் புதுப்பிக்க பதிவு கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வே ண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, கடன் வழங்கும் வங் கியும், அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தும் மாற்றமி ன்றி தொடரும் சந்தர்ப்பங்களில், ஆண்டுதோறும் எம்.ஓ.டி.,ஐ புதுப்பித்து பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கட்டணத்தையும் விலக்கு அளிக்குமாறு அமைச்ச ர்கள் லோகேஷ் தமிழ் செல்வன், மதன்ராஜாவுக்கு கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ