டில்லியில் சர்வதேச ட்ரோன் கண்காட்சி
புதுடில்லி: டில்லியில் நாளை துவங்க உள்ள சர்வதேச போலீஸ் மற்றும் ட்ரோன் கண்காட்சியில், 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியில், உலகளாவிய காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ட்ரோன்கள், ஏ.ஐ., மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஆயுதங்கள், வெடி மருந்துகள், கவச வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. இதன் வாயிலாக உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் நேரடியாக கலந்துரையாட வாய்ப்பு உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.