உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை

புதுடில்லி;வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்பார்ம் கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மீது மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணையை துவங்கியுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது: இ - காமர்ஸ் நிறுவனங்கள், கேஷ் ஆன் டெலிவரி வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதோடு, ஏமாற்றுவதற்கு சமமாகும். இதுதொடர்பாக விரிவான விசாரணை துவங்கியுள்ளது. நாட்டின் வளர்ந்து வரும் இத்துறையில் வெளிப்படைத்தன்மை, நியாயமான விலையை உறுதிப்படுத்த வேண்டும். நுகர்வோர் உரிமைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ