உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐபோன் ஏற்றுமதி முதல் காலாண்டில் ரூ.52,200 கோடியை எட்டியது

ஐபோன் ஏற்றுமதி முதல் காலாண்டில் ரூ.52,200 கோடியை எட்டியது

புதுடில்லி:இந்தியாவில் இருந்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஐபோன் ஏற்றுமதி 52,200 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியால், இந்தியாவின் ஐபோன் போன்கள் ஏற்றுமதி முதல் காலாண்டில், எப்போதும் இல்லாத அளவுக்கு 52,200 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதியாகியிருந்த 27,840 கோடி ரூபாயைக் காட்டிலும் 82 சதவீதம் அதிகமாகும். இதையடுத்து, முதல் காலாண்டில் ஒட்டுமொத்த ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 58 சதவீதம் அதிகரித்து, சாதனை அளவாக 67,164 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 42,630 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஏற்றுமதிகளில் ஆப்பிள் மட்டும் கிட்டத்தட்ட 78 சதவீதத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை