உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கேன்சல் செய்ய 2 நாட்களுக்கு முன்னர் தெரிவித்தால் போதும்

கேன்சல் செய்ய 2 நாட்களுக்கு முன்னர் தெரிவித்தால் போதும்

புதுடில்லி:மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்து வரும்போது அதை ரத்து செய்ய விரும்பினால் இனி இரண்டு நாட்களுக்குள் தெரிவித்தால் போதுமானது.'எஸ்.ஐ.பி., வாயிலான முதலீட்டை ரத்து செய்வது குறித்த முதலீட்டாளர்களின் கோரிக்கையை, இரண்டு நாட்களுக்குள் பரிசீலித்து, செயல்படுத்துவது கட்டாயம்' என மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு 'செபி' புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.மியூச்சுவல் பண்டுகளில், சமீபகாலமாக எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீட்டு திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. சந்தையில் காணப்படும் இறக்கம், எதிர்பாராத வருமான சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால், சில நேரங்களில் இதனை நிறுத்தும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்படுகின்றனர்.இச்சூழலில், எஸ்.ஐ.பி.,யை ரத்து செய்வதற்கு, முதலீட்டாளர்கள் 10 நாட்களுக்கு முன்னதாகவே மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். தற்போது இந்த அவகாசத்தை இரண்டு நாட்களாக குறைத்து, செபி உத்தரவிட்டுள்ளது. இது 'ஆன்லைன், ஆப்லைன்' என, அனைத்து எஸ்.ஐ.பி., திட்டங்களுக்கும் பொருந்தும்.செபியின் இந்த புதிய உத்தரவால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை ரத்து செய்ய, எஸ்.ஐ.பி., பிடித்தம் செய்வதற்கு மூன்று நாட்கள் முன்புகூட விண்ணப்பிக்கலாம். இதில், இரண்டு வேலை நாட்களில் மியூச்சுவல் பண்டு நிறுவனம் தீர்வு காணும் என்பதால், வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்புவதால் விதிக்கப்படும் அபராதம், தேவையற்ற நிதி அழுத்தம் உள்ளிட்டவற்றையும் தவிர்க்க இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை