உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கரன் ஜோகர் பூனாவாலா கைகோர்ப்பு; ரூ.1,000 கோடிக்கு கைமாறும் பங்குகள்

கரன் ஜோகர் பூனாவாலா கைகோர்ப்பு; ரூ.1,000 கோடிக்கு கைமாறும் பங்குகள்

புதுடில்லி : பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரன் ஜோகர், தன் 'தர்மா புரொடக்ஷன்' நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை, மருந்து நிறுவனமான 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவான, எஸ்.ஐ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலாவிடம் விற்பனை செய்கிறார். கொரோனா தடுப்பூசி மருந்தான 'கோவிஷீல்டு' தயாரித்ததில் பிரபலமான மருந்து நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் பெயர் பெற்றது. அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, 'சீரேன் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில், கரன் ஜோகரின் ஸ்டூடியோ நிறுவன 50 சதவீத பங்குகளை, 1,000 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்.கடந்த 2021ம் ஆண்டில், 'வாகவ் இன்டராகடிவ்' என்ற சமூக ஊடகத்தின் 20 சதவீத பங்குகளை வாங்கியதற்கு பின், மருந்து தயாரிப்பு தொழிலுக்கு வெளியே, புதிய துறையில் அடார் பூனாவாலா செய்யும் முதலாவது மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை