உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கெயில் ஆலைக்கு நிலம் வழங்க கர்நாடகா ஒப்புதல்

கெயில் ஆலைக்கு நிலம் வழங்க கர்நாடகா ஒப்புதல்

பெங்களூரு:பொதுத்துறையைச் சேர்ந்த 'கெயில் இந்தியா' எரிவாயு நிறுவனம் பயோ சி.என்.ஜி., ஆலை அமைப்பதற்கு நிலம் வழங்க, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவிக்கையில், “பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள ஹரலகுண்டே கிராமம், பேகூர் ஹோப்ளியில், 18 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ''இங்கு, நாள் ஒன்றுக்கு 300 டன் பயோ சி.என்.ஜி., உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்படும். எதிர்காலத்தில் இதன் உற்பத்தி திறனை நாள் ஒன்றுக்கு 500 டன் வரை அதிகரிக்கலாம். இந்த நிலம், கெயில் நிறுவனத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். வருவாய் துறையும், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனமும் இணைந்து நிலத்தை அளந்து, கெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்,” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ