வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆண்டிற்கு 2000 கோடி மதிப்பிலான ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கும் நிலையில் மாற்று சந்தையில் கவனம் செலுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்கி உதவிகள் செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை தொடர்ந்தால் கரூர் மாவட்டத்தில் பல ஜவுளி வியாபாரிகளும் பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். கரூர் மாவட்டத்தில் பல குடும்பங்கள் ஜவுளி நிறுவனத்தின் வேலைகளை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். ஜவுளி நிறுவனத்தில் அனைத்து பிரிவுகளில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களும் ஜவுளி நிறுவனத்தின் ஊதியத்தை வைத்து தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி வியாபாரிகளும் தொடர்ந்து கரூர் மாவட்ட தொழிலாளர்களுக்கு வேலைகளை கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். சமீப காலத்திற்கு முன் நூல் விலைகள் ஏற்றம் கூட வியாபாரிகளையும், தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்தது. எனில் கரூர் மாவட்ட ஜவுளி நிறுவன வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கம் உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.