எல் அண்டு டி., நிறுவனத்துக்கு ரூ.15,000 கோடி மெகா ஆர்டர்
புதுடில்லி:எல் அண்டு டி., நிறுவனம் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான அதன் மிகப்பெரிய வெளிநாட்டு ஆர்டரை, கத்தார் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இந்த ஆர்டர், கத்தாரின் வடகிழக்கு கடலோரத்தில் உள்ள இரண்டு மின்னுற்பத்தி திட்டங்களின் பொறியியல், கொள்முதல், தயாரிப்பு, நிறுவல் மற்றும் துவக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. எல் அண்டு டி.,யின் எனர்ஜி ஹைட்ரோகார்பன் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள இந்த ஆர்டர், நிறுவனத்தின் எரிசக்தி பிரிவு வணிகத்தை வலுப்படுத்தஉதவும் என, எல் அண்டு டி., தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.