உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹைதராபாத் மெட்ரோ திட்டம் முழுக்கு போடும் எல் அண்டு டி.,

ஹைதராபாத் மெட்ரோ திட்டம் முழுக்கு போடும் எல் அண்டு டி.,

ஹைதராபாத்:தொடர் நஷ்டம் காரணமாக, ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து முழுதுமாக விலகிவிட, எல் அண்டு டி., நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும்,மெட்ரோ திட்டத்தில் தன் வசமுள்ள 90 சதவீத பங்குகளை, மத்திய அல்லது மாநில அரசுக்கு விற்க தயார் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் எல் அண்டு டி., தெரிவித்துள்ளதாவது: தெலுங்கானா அரசிடம் தொடர்ச்சியாக பேசி வந்த போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. இந்த தாமதம், நஷ்டத்தை அதிகரித்து வருவதுடன், நிலைமையை சமாளிக்க முடியாத அளவுக்கு மாற்றி இருக்கிறது. இது போன்ற சூழலில், எங்கள் பங்குகளை மாநில அல்லது மத்திய அரசு வாயிலாக புதிய துணை நிறுவனத்துக்கு விற்க விரும்புகிறோம். மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டம், இரண்டாவது கட்டத்தின் ஏ,பி என இயக்குதல், பராமரிப்பு பணிகளை ஒப்படைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை