உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மருத்துவ காப்பீடில் நுழையும் எல்.ஐ.சி.,

மருத்துவ காப்பீடில் நுழையும் எல்.ஐ.சி.,

புதுடில்லி:வருகிற 31ம் தேதிக்குள் மருத்துவ காப்பீடு நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்குவது குறித்த அறிவிப்பை எல்.ஐ.சி., வெளியிடும் என, அதன் தலைமை நிர்வாக அதிகாரி மொஹந்தி தெரிவித்தார். இருப்பினும், எல்.ஐ.சி., வாங்க விரும்பும் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் பெயரை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்து மொஹந்தி கூறியதாவது: எல்.ஐ.சி., நிறுவனம், மருத்துவ காப்பீடில் நுழைவதற்கான திட்டங்கள் குறித்த பேச்சு இறுதி கட்டத்தில் உள்ளது.ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலுக்காக நேரம் கூடுதலாக தேவைப்படும் என்பதால், இந்த நிதியாண்டின் இறுதி நாளான இம்மாதம் 31ம் தேதிக்குள், ஒரு முடிவு எடுக்கப்படும் என, நம்புகிறேன். மேலும், எல்.ஐ.சி.,யின் பரிசீலனையில் உள்ள நிறுவனத்தில், பெரும்பான்மையான பங்குகள் வாங்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை